Sunday, 21 October 2012



தமிழகத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள நம் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த அய்யா தனபால் அவர்களுக்கு, கிறித்தவ  அருந்ததியர் உரிமை நலச்சங்க்த்தின் தலைவர் ஜேம்ஸ், பொருளாளர் சவரிமுத்து, மற்றும் உறுப்பினர்கள், 16.10.2012 செவ்வாய்கிழமை அன்று நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் நமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

Friday, 5 October 2012





இருநூறு ஆண்டுகால கிறித்தவ அருந்ததியர்கள் வரலாற்றில், கடந்த ஆண்டு நமது இயக்கம் துவங்கியபின், தமிழ்நாடு கத்தோலிக்க கிறித்தவ ஆயர் பேரவையின், தாழ்த்தப்பட்ட/ பிற்படுத்தப்பட்ட பணிக்குழுவில் சகோதரர் திரு. சவரிமுத்து அவர்கள் முதன்முதலாக ஒரு கிறித்தவ அருந்ததியர் தமிழக அமைப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். அவர். நமது இயக்கத்தின் பொருளாளரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் நமது இயக்கத்திற்க்காக, முழுநேர பணியாற்றி, தன்னை முழுமையாக நமது இயக்கத்திற்க்காக அர்ப்பணித்துள்ளார். அவரை அனைத்து கிறித்தவ அருந்ததியர்கள் சார்பாக கிறித்தவ அருந்ததியர் உரிமை இயக்கம், வாழ்த்தி பெருமை கொள்கிறது.

Friday, 10 August 2012

நமக்காக பரிந்து பேசும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர். திரு. ராஜா அவர்கள்.


தலித் இனத்தின் தலைமகனாக திகழும், சென்னை மயிலைப் பேராயர். மேதகு.சின்னப்பா ஆண்டகை அவர்களின் உரைவீச்சு.


எஸ்சி/எஸ்டி கமிஷனின் அகில இந்திய இயக்குனரான, அருட்தந்தை.தேவசகாயராஜ் அவர்களுடன் நம் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினரான தோழர். ஆரோக்கியசாமி அவர்கள்.


பேரணிக்கு தலைமை தாங்கி வழி நடத்தும், தமிழக தலித் ஆயரும், எஸ்சி/எஸ்டி கமிஷனின் தமிழக தலைவருமான, செங்கல்பட்டு மறைமாவட்ட மேதகு ஆயர். நீதிநாதன் அவர்கள்.




ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி நடைபெற்ற பேரணியின் புகைபடங்கள்.












பேரணியின் பங்கேற்கும் தமிழக எஸ்சி/எஸ்டி கமிஷன் இயக்குனர் வணக்கத்திற்குரிய அருட்தந்தை.ஆல்பர்ட் நெல்சன்.அடிகளார் அவர்கள்.






பேரணியில் பங்கேற்கும் தலித் ஆயர் பெருமக்கள்.



தலித் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களுக்கு அரசு சலுகை கொடுப்பதற்க்காக, மத்திய அரசின் கவனம் ஈர்க்க ஆண்டுதோறும் தலைநகர் டெல்லியில் நாடு முழுவதிலுமிருந்து வரும் தலித் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்கள் பங்கேற்கும் மிகப்பெரிய பேரணி, இந்த ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில் இந்த ஆண்டு நமது இயக்கமும் பெருமையுடன் பங்கேற்றது. கொட்டும் மழையில் நடைபெற்ற மிகப்பெரிய பேரணியின் வீடியோ காட்சியை காணவும்


Monday, 23 July 2012

Rev.Fr. Albert Nelson







அருட்தந்தை. ஆல்பர்ட் நெல்சன்

கோவை மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை. ஆல்பர்ட் நெல்சன். தமிழக எஸ்.சி/எஸ்.டி பணிக்குழுவின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். தந்தை அவர்களுக்கு கிறித்தவ அருந்ததியர் உரிமை இயக்கத்தின் பணிவான வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

Saturday, 24 March 2012

நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கிறித்தவ அருந்ததியர்கள்

நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கிறித்தவ சமயத்தின் தாய் திருச்சபையாம் கத்தோலிக்க திருச்சபையை தழுவி, இன்றுவரை விசுவாசத்தில் உறுதியுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் அருந்ததியர்கள், தமிழ்நாட்டில் பரவலாக உள்ளனர். தீண்டாமை சேற்றிலிருந்து விடுபட கிறித்தவம் தழுவிய அருந்ததியர்களுக்கு, இங்கேயும் அதே சேற்றோடுதான் இன்றும் வாழவேண்டியுள்ளது. அங்கே சாதி இந்துக்கள், இங்கே சாதி கிறித்தவர்கள். அதைவிட இங்கே சற்று நாற்றம் குறைவு. அவ்வளவுதான்.

இவ்வளவு ஆண்டுகளாக கிறித்தவர்களாக இருந்தும், இன்றும்கூட ஒரு கிறித்தவ இளைஞனோ, இளைஞியோ, அருட்தந்தையாகவோ, அருட்சகோதரனாகவோ, கன்னியராகவோ, எளிதில் இயலாது. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அதே நிலைதான்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கிறித்தவ சமயத்தில் உறுதியாக வாழ்ந்துகொண்டிருக்கும், திருச்சி பாலக்கரையிலுள்ள தர்மநாதபுரம் கத்தோலிக்க கிறித்தவச் சேரியை பாருங்கள்.














இரவுக்கல்வியில் கிறித்தவ அருந்ததிய குழந்தைகள்.



ஒரு கிறித்தவ அருந்ததியப் பெண்மணியின் 8X6 அளவுள்ள ஏழ்மைக்குடில்.


நடுவீதியே சமையலறையாகவும், உண்வறையாகவும், படுக்கையறையாகவும் கொண்டு, இயேசுவைப் போல எளிய வாழ்வில் கிறித்தவ அருந்ததியர்கள்.


புனித அன்னாள் சபை சகோதரிகளின் நிதியுதவியால் கட்டப்பட்ட, கிறித்தவ அருந்ததியர்களின் சிற்றாலயம்.