நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கிறித்தவ சமயத்தின் தாய் திருச்சபையாம் கத்தோலிக்க திருச்சபையை தழுவி, இன்றுவரை விசுவாசத்தில் உறுதியுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் அருந்ததியர்கள், தமிழ்நாட்டில் பரவலாக உள்ளனர். தீண்டாமை சேற்றிலிருந்து விடுபட கிறித்தவம் தழுவிய அருந்ததியர்களுக்கு, இங்கேயும் அதே சேற்றோடுதான் இன்றும் வாழவேண்டியுள்ளது. அங்கே சாதி இந்துக்கள், இங்கே சாதி கிறித்தவர்கள். அதைவிட இங்கே சற்று நாற்றம் குறைவு. அவ்வளவுதான்.
இவ்வளவு ஆண்டுகளாக கிறித்தவர்களாக இருந்தும், இன்றும்கூட ஒரு கிறித்தவ இளைஞனோ, இளைஞியோ, அருட்தந்தையாகவோ, அருட்சகோதரனாகவோ, கன்னியராகவோ, எளிதில் இயலாது. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அதே நிலைதான்.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கிறித்தவ சமயத்தில் உறுதியாக வாழ்ந்துகொண்டிருக்கும், திருச்சி பாலக்கரையிலுள்ள தர்மநாதபுரம் கத்தோலிக்க கிறித்தவச் சேரியை பாருங்கள்.
இரவுக்கல்வியில் கிறித்தவ அருந்ததிய குழந்தைகள்.
ஒரு கிறித்தவ அருந்ததியப் பெண்மணியின் 8X6 அளவுள்ள ஏழ்மைக்குடில்.
நடுவீதியே சமையலறையாகவும், உண்வறையாகவும், படுக்கையறையாகவும் கொண்டு, இயேசுவைப் போல எளிய வாழ்வில் கிறித்தவ அருந்ததியர்கள்.
புனித அன்னாள் சபை சகோதரிகளின் நிதியுதவியால் கட்டப்பட்ட, கிறித்தவ அருந்ததியர்களின் சிற்றாலயம்.