......Christian Arunthathiar Rights Movement......
Monday, 10 August 2020
Wednesday, 6 November 2013
நம் திவ்விய இரட்சகருடைய கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட ஜெபத்தின் வரலாறு:
கர்த்தர் பிறந்த 803-ம் ஆண்டில் நம் ஆண்டவருடைய திருக்கல்லரையில் கண்டெடுக்கப்பட்ட இப்பரிசுத்த
ஜெபமானது அர்ச். பாப்பாண்டவரால் சார்லஸ் என்னும் அரசர் யுத்தத்திற்கு
போகும்போது அவர் யாதொரு தீங்குக்குள்ளாமாகமல் சுகமே மீண்டு வர அவருக்கு
கொடுக்கப்பட்டது..
இப்புனித ஜெபத்தை யாதொருவர் பிரதி தினமும், ஜெபித்தாலும், காதால்
கேட்டாலும் அல்லது அவர்கள் சடுதி மரணத்தால் சாக மாட்டார்கள்..
தண்ணீரில் மூழ்கியும், விஷமுள்ள ஜந்துகளாலும் சாகமாட்டார்கள்..
கர்ப்ப வேதனைப்படும் எந்த பெண்களும் இதை ஜெபித்தால் அவர்கள் யாதொரு
துன்பமுமின்றிப் பிரசவிப்பார்கள்..
பிறந்த குழந்தைகளின் வலது பக்கத்தில் இந்த ஜெபத்தை வைத்திருந்தால் யாதொரு
ஆபத்தும் நேரிடாது..
இசிவு உண்டாகிறவர்களின் வலதுபுறத்தில் இதை வைத்தால் அவர்கள் உடனே எழுந்து
ஆண்டவரைத் தோத்தரிப்பார்கள்..
இதை ஜெபித்து வரும் எந்த வீடும் ஆண்டவருடைய ஆசிர்வாதத்தால் நிறையும்..
இதை எப்பொழுதும் கூடவே வைத்துக்கொண்டிருப்பவர்கள் மின்னல், இடி
முழக்கத்திற்கு தப்பி வாழ்வார்கள்..
இவர்கள் மரண நாள் நெருங்குகையில் மூன்று நாள் முன்னதாகவே
எச்சரிபுக்குள்ளாவார்கள் என்று அநேக இறை வல்லுனர்கள் எழுதி
வைத்திருக்கிரார்கள்...
ஜெபம்:
ஆ! மிகவும் வந்திக்கதக்க கர்த்தாவும், இரச்சகருமாகிய சேசுசக்கிறிஸ்துவே! எங்கள் பெரும் பாவத்திற்காகக் கொலைக்களத்தில் உண்மையாகவே, இறந்தீர்.. ஆ! கிறிஸ்து இரட்சகருடைய பரிசுத்த சிலுவையே! எங்களுடைய நினைவுகளைக் கவனியும்.. ஆ! ஆண்டவருடைய பரிசுத்த சிலுவையே! எந்த ஆயுத அபாயங்களுக்கும் எங்களை தப்புவியும்.. ஆ! கர்த்தருடைய பரிசுத்த சிலுவையே! எங்களை சகல துன்பங்களினின்று காப்பாற்றும்.. ஆ! சேசு இரட்சகருடைய பரிசுத்த சிலுவையே! எங்கள் சத்துருக்களிடத்திலும் எங்களை பாதுகாத்தருளும்.. ஆ! எங்கள் கர்த்தருடைய பரிசுத்த சிலுவையே! எங்கள் அபாய மரணத்தினின்று எங்களை காப்பாற்றி நித்திய ஜீவனைத் தந்தருளும்! ஆ! சிலுவையில் அறையுண்ட நாசரேனு சேசுநாதரே! எப்போதும் எங்கள் மீது இறக்கம் வையும்.. கர்த்தராகிய சேசுக் கிறிஸ்து நாதருடைய மகிமையாலும் அவருடைய பாடுகளாலும், உயிர்த்தெலுதலினாலும், தெய்வத் தன்மைக்குரிய மோட்ச ஆரோகணத்தினாலும் எங்களை பரலோகத்தில் சேர்க்க உண்மையாகவே மாட்டுத் தொழுவத்தில் பிறந்தும், பெரிய வெள்ளிகிழமையில் கல்வாரி மலையின் மேல் சிலுவையில் அறையப்பட்டு உயிர் விட்டும் நிக்கொதேமு, சூசை என்னும் பக்தர்களால் சிலுவையினின்று இறக்கி அடக்கஞ் செய்யப்பட்டீர்.. மெய்யாகவே நீர் பிறந்த பதிமூன்றாம் நாள் மூன்று அரசர்களால் தூபம், பொன், வெள்ளைப் போளம் முதலிய காணிக்கை அளிக்கப்பட்டீர்.. மெய்யாகவே நீர் மோட்சத்திற்கு எழுந்தருளினீர்.. ஆகவே, கர்த்தராகிய சேசுக் கிறிஸ்துநாதருடைய மகிமையானது எங்கள் சத்துருக்களுடைய வஞ்சனைகளில் இருந்து இப்போதும், எப்போதும், காப்பாற்றும்.. ஆ! ஆண்டவராகிய சேசுவே! எங்கள் மீது கிருபயாயிரும்.. அர்ச். மரியாயே, அர்ச். சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.. (தங்களுக்கு வேண்டியதைக் கேட்கவும்) ஆ! கர்த்தராகிய சேசுவே! உம்முடைய பாடுகளின் வழியாக இந்தப் பாவ உலகத்தினின்று உம்முடைய ஆத்துமம் பிரிந்தது உண்மையே.. அப்படியே நாங்களும் எங்கள் அவஸ்தை நேரத்தில் எங்கள் பாடுகளை யாதொரு பழியும் கூறாமல் பொறுமையோடு சகிக்கக் கிருபை கூர்ந்தருளும், உம் பாடுகளின் மூலமாக எங்களுக்கு நேரும் எல்லா இடையூருகளிலும், இப்பொழுதும், எப்பொழுதும் எங்களை தப்புவியும்.. ஆமென்.

Subscribe to:
Posts (Atom)