கடந்த 11.12.3013 அன்று காலை 10:30 மணியளவில்
புது டில்லி ஜந்தர் மந்தரில் தலித் கிறித்தவர்கள் மற்றும் தலித்
இஸ்லாமியர்களை பட்டியல் சேர்க்கக்கோரும் போராட்டம் நடைபெற்றது. இதில்
பல்வேறு தேசிய, மாநில தலித் அமைப்புகளுடன், கிறித்தவ அருந்ததியர் உரிமை இயக்கமும் பங்கேற்றது.
சுமார் 12:30 மணியளவில் பாராளுமன்றம் நோக்கி சுமார் 5000 பேர் அமைதியாக,
பேரணியாக சென்றனர். அப்போது தலித் கிறித்தவர்கள் மற்றும் தலித்
இஸ்லாமியர்கள் மீது டில்லி காவல் துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி
பேரணியை கலைக்க முற்பட்டனர். அதைக்கண்டு சிறிதும் அஞ்சாமல் டில்லி பேராயர்
மற்றும் தமிழக ஆயர்களான மேதகு.நீதிநாதன்( செங்கல்பட்டு மறைமாவட்டம் )
மேதகு.செள்ந்தரராஜன்( வேலூர் மறைமாவட்டம் ). சி.எஸ்.ஐ. ஆயர்கள்.
பாதிரியார்கள், கத்தோலிக்க குருக்கள், அருட்கன்னியர்களுடன் தலித் கிறித்தவ,
இஸ்லாமிய மக்கள் அனைவரும் அங்கேயே நின்றுகொண்டிருந்தனர்.
பின்னர்
'வருண்' வாகனத்தின் மூலம் சேற்றுத்தண்ணீரைப் பீய்ச்சி அடித்து பேரணியை
கலைக்க முற்பட்டனர். அப்போது கொஞ்சம் கலைந்த கூட்டம், மீண்டும் ஒன்று கூடி
போராட்டத்தை துவக்கியது. அதன் பின்னர் முழு வீச்சில் வெறிதாக்குதலை டில்லி
காவல்துறையினர் பிரயோகித்தனர். சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு
காட்டுவெறித் தாக்குதல் தொடர்ந்தது. இச்சம்பவத்தில் டில்லி பேராயர், தமிழக
ஆயர்கள்,குருக்கள், கன்னியர்கள் மற்றும் தலித் மக்கள் மிக மோசமாக
காயமுற்றனர்.
அந்நிலையில் மீண்டும் ஒன்றுகூடி, சாலையில்
முழந்தாளிட்டும், படுத்தும் போராட்டம் தொடர்ந்தது. பின்னர் அனைவரையும் கைது
செய்து, பாராளுமன்ற காவல்நிலைய வளாகத்தில் சிறை வைத்தனர். சிறை
வளாகத்திற்குள்ளும் தமிழிலும், ஆங்கிலத்திலும், ஹிந்திலுமாக போராட்ட
முழக்கங்கள் ஓயாது ஒலித்துகொண்டிருந்தது.






No comments:
Post a Comment